அரசு மானியத்தில் மாடுகளுக்கு காப்பீடு : பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு

schedule
2021-06-20 | 14:34h
update
2021-06-20 | 14:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Livestock Insurance under Government Subsidy: Perambalur Collector Notice

பெரம்பலூர் கலெக்டர் வெங்டபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மூலம், 2020 – 2021 ஆம் ஆண்டுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு திட்டம், 1800 கால்நடைகளை காப்பீடு செய்ய, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், கால்நடைகளின் மதிப்பில் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை காப்பீடு செய்து கொள்ளலாம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, 70 சதவீதம் மானியத்தில் காப்பீடு செய்யப்படும். இதர வகுப்பினர்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் காப்பீடு செய்யப்படும்.

Advertisement

உதாரணமாக ரூ.30,000 மதிப்பில் பசு (அ) எருமைகளுக்கு காப்பீடு செய்ய தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் ரூ.153 மட்டும் செலுத்தினால் மீதமுள்ள தொகையினை அரசு மானியமாக ஏற்றுக் கொள்ளும். அதிகபட்மாக ஒரு குடும்பத்திற்கு, இரண்டரை முதல் 8 வயது உடைய, 5 பசு அல்லது எருமை மாடுகளை காப்பீடு செய்து கொள்ளலாம். அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.05.2026 - 20:50:54
Privacy-Data & cookie usage: