பெரம்பலூர் அருகே லோடு ஆட்டோ

பைக் மோதல்: அண்ணன் தம்பி பலி!

schedule
2022-06-06 | 08:38h
update
2022-06-06 | 08:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Load auto-bike collision near Perambalur: Brothers killed!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே லோடு ஆட்டோ பைக் மீது மோதிய சம்பவத்தில், பைக்கில் சென்ற அண்ணன் தம்பி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருவத்தை சேர்ந்தவர்கள் பாண்டியன் (40), சசிகுமார் (45), சகோதரர்களான இவர்கள் இருவரும், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் கிராமத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலையில் பணியாற்றி வந்தனர். கிருஷ்ணாபுரத்தில் தங்கியிருந்தனர்.

Advertisement

சொந்த ஊருக்கு சென்றிருந்த சகோதரர்கள் இருவரும் இன்று காலை பணிக்கு வர பைக்கில் தியாகதுருவத்தில் இருந்து ஒரே பைக்கில் பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். பாண்டியன் பைக்கை ஓட்டி வந்தார். அவர்கள் உடும்பியம் தனியார் சர்க்கரையின் 2வது கேட்டு அருகே வந்த போது எதிரே வேகமாக வந்த லோடு ஆட்டோ இவர்கள் மீது அதிபயங்கரமாக மோதியது.

இதில் பைக்கில் அமர்ந்திருந்த பாண்டியன் பின்னால் வந்த லாரியின் முன்ன பகக கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்தார். படுகாங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த சசிக்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபதாக உயிரிழந்தார். படுகாயமடைந்த பாண்டியனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற அரும்பாவூர் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலையில் வேலைக்கு சென்ற சகோதரர்கள் ஒரே நேரத்தில் விபத்தில் பலியான சம்பவம் அப்பககுதி மக்களையும், சர்க்கரை ஆலை ஊழியர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 19:45:12
Privacy-Data & cookie usage: