நாமக்கல் அருகே மகளிர் சுயஉதவி குழுவிற்கு ரூ.1.5 கோடிகடன் உதவி எம்எல்ஏ சந்திரசேகரன் வழங்கினார்

schedule
2018-11-28 | 06:01h
update
2026-06-13 | 07:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Loan Assistant MLA Chandrasekaran with Rs.1.5 crores for women’s self-help group near Namakkal

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.1.5 கோடி கடனுதவிகளை எம்எல்ஏ சந்திரசேகரன் வழங்கினார். சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டியில் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மகா சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். சங்கத்தின் துணை தலைவர் சந்திரசேகரன், சங்க செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

கூட்டத்தில் சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழக அரசு மூலம் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கடன் உதவி குறித்தும் மற்றும் இதர திட்டங்கள் குறித்தும் பேசினார். இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 17 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு டாப்செட் கோ மூலமாக ரூ. 1 கோடியே 35 லட்சம் வழங்க ஏற்பாடு செய்த தொகையில் இருந்து ஒவ்வொரு குழுவிற்கும் ரூ. 6 லட்சம் கடன் உதவி வழங்கினார். மேலும் சங்க உறுப்பினர்கள் 50 பேருக்கு வங்கியின் 14 சதவீத ஈவு தொகையினையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் சீனிராமசாமி, கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 07:42:30
Privacy-Data & cookie usage: