மாற்றுத் திறனாளிகள் சிறு, குறு தொழில் செய்வதற்காக வங்கிகளில் கடன்: பெரம்பலூர் கலெக்டர்!

schedule
2021-10-29 | 13:06h
update
2021-10-29 | 13:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Loans to banks for small and micro enterprises: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாது:

Advertisement

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறு, குறு தொழில்களுக்கான வங்கி கடன் மான்யம் வழங்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 18 வயது முதல் 55 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வங்கிகடன் மான்யம் பெறாதவராக இருக்கவேண்டும். எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டைநகல், குடும்ப அட்டை நகல், கல்வி மாற்றுச் சான்றிதழ், ஆதார் அட்டைநகல், வங்கி பாஸ்புக் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்டஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர். என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 15.11.2021தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் விவரங்களுக்கு : 04328 – 225474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 12:31:04
Privacy-Data & cookie usage: