உள்ளாட்சி தேர்தல்; அதிமுக 100 சதம் வெற்றி ; ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பேச்சு!

schedule
2019-11-13 | 01:58h
update
2026-06-30 | 12:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Local Body Election; AIADMK should be 100 percent successful; R.T. Ramachandran MLA Talk!

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 100 சதவீதம் வெற்றியை பெற அனைத்து நிர்வாகிகளும் முழுமையாக பாடுபடவேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.

பெரம்பலூர் தனலட்சுமிசீனிவாசன ஹோட்டலில், அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் துரை தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி, சுரேஷ், நகர செயலாளர் ராஜபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ தமிழ்செல்வன், முன்னாள் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, மாநில மீனவரணி இணை செயலாளா தேவராஜன் உட்பட பலர் பேசினர். 

Advertisement

மாவட்ட செயலாளரும், எம்எல்வுமான ராமச்சந்திரன் சிறப்புரையாற்றுகையில், அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபோர் வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் தங்களது விருப்பமனுவினை அளிக்கலாம். தகுதியானவர்கள் அனைவருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும். கட்சி நிர்வாகிகள் தங்களது சொந்த வெறுப்பு, விருப்பு இல்லாமல் கட்சி தலைமையால் அறிவிக்கப்படும் வேட்பாளர்களுக்கு முழுமனதோடு உழைக்கவேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அதாவது 100 சதவீத வெற்றிக்காக அனைவரும் இணைந்து பாடுபடவேண்டும் என்றார். 

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ராணி, பூவைசெழியன், மாவட்ட அணி செயலாளர்கள் ராஜாராம், செல்வகுமார், வீரபாண்டியன் மற்றும் குரும்பாபாளையம் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.06.2026 - 12:52:05
Privacy-Data & cookie usage: