உள்ளாட்சி தேர்தல் திருவிழா; பெரம்பலூரில் அதிமுக சார்பில் கட்சியினர், விருப்ப மனு

schedule
2019-11-15 | 06:42h
update
2019-11-15 | 06:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Local election festival started in Perambalur; Petition for parties and posts on behalf of AIADMK in Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சியினர் திரளாக பலர் காலையிலே விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.

பெரம்பலூர்,நவ.15-

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுவினர், பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கவுன்சிலர், ஆலத்தூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய நான்கு ஒன்றியங்களுக்கான கவுன்சிலர்கள், மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு ஆகிய நான்கு பேரூராட்சிகளில் உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் அதிமுகவினர் அனுமதி கோரும் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து, உரிய கட்டணத்துடன் அளித்தனர். அதனை பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ , பெரம்பலூர், எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ பூவை.செழியன், மீனவரணி மாநில செயலாளர் வெண்பாவூர் தேவராஜன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே. கர்ணன், என்.சிவப்பிரகாசம், உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழச்சியில் பல்வேறு அணியை சேர்ந்த பொறுப்பாளர்கள், செயலாளர்கள், கிளை, பேரூர், ஒன்றிய நிர்வாகிள், தொண்டர்கள் திரளான கலந்து கொண்டனர்.

விருப்ப மனுக்கள் (இன்று) நவ. 15, நாளையும் பெரம்பலூரில உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப படிவங்களை பெறப்படுகிறது. நகர சபை தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும், நகர சபை வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2500, பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.3 ஆயிரம் என அக்கட்சியின் தலைமை கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 10:58:20
Privacy-Data & cookie usage: