உள்ளாட்சிகள் தினம்; பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு!

schedule
2023-10-27 | 16:09h
update
2023-10-27 | 16:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Local Government Day; Gram Sabha Meeting in Perambalur District: Collector’s Announcement!
பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
உள்ளாட்சிகள் தினமான 01.11.2023 அன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது,
ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு தலைமையேற்க வேண்டும். ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும்.
அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டம். மேலும், கிராமசபைக் கூட்டத்தில் கீழ்க்காணும் 5 கூட்டப்பொருள்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.
Advertisement

முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுயஉதவி குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டு வரி / சொத்து வரி செலுத்துதல்.
உள்ளாட்சிகள் தினமான அன்று கிராம சபைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர்கள், துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்கள் (கிராம ஊராட்சி வாக்காளர்கள்) அனைவரும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராமசபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறைத் தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் கூறிட வேண்டும்.
கிராம சபைக்கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சிகள் தினமான 01.11.2023 அன்று கிராம சபைக் கூட்டத்தில் கிராம வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்களாகிய வாக்களர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சியில் இதர பொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் தெரிவித்துள்ளார்.
விளம்பரம்:
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 00:02:48
Privacy-Data & cookie usage: