பெரம்பலூரில் மக்கள் நீதிமன்றம்: 628 வழக்குகளுக்கு 3.28 கோடிக்கு இழப்பீட்டு தொகை உத்தரவு!

schedule
2024-03-09 | 15:35h
update
2024-03-09 | 15:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Lok Adalat in Perambalur: 3.28 crore compensation order for 628 cases!

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ.பல்கீஸ் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்ற குழு அமைக்கப்பட்டு, அதில் பெரம்பலூரில் சார்பு-நீதிபதி எஸ். அண்ணாமலை மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்.ராஜமகேஷ்வர் முதலாவது குழுவாகவும் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எம்.மூர்த்தி மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி, பி.மகாலெட்சுமி 2வது குழுவாகவும், குற்றவியல் வழக்குகளுக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்:1, சுப்புலெட்சுமி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்:2 சங்கீதா சேகர் மற்றும் குன்னம், வேப்பந்தட்டை ஆகிய நீதிமன்றங்களில் பணியில் உள்ள நீதிபதிகளை தலா ஒவ்வொரு குழுக்களாக அமைக்கப்பட்டு மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியுடன் ஒரு வழக்கறிஞருடன் குழுக்கள் அமைக்கப்பட்டு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

Advertisement

இதில் பெரம்பலூர் நீதிமன்றங்களில் உள்ள வருவாய்துறை, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் உட்பட சுமார் 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளபட்டு அதில் வழக்காடிகள், எதிர் வழக்காடிகள் வரவழைத்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் பேசி 628 வழக்குகள் முடிவுற்றது.

மோட்டார் வாகன விபத்து, காசோலை மோசடி வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் உட்பட இழப்பீட்டுத் தொகை ரூ.3 கோடியே 28 லட்சத்து 64 ஆயிரத்து 853 உத்தரவிற்கான ஆணை தேசிய மக்கள் நீதிமன்றம் முன்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ.பல்கீசால் வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள், வழக்காடிகள், எதிர்வழக்காடிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான எஸ். சந்திரசேகர் செய்திருந்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 03:08:01
Privacy-Data & cookie usage: