பெரம்பலூர் மாவட்டத்தில், மக்கள் நீதிமன்றம்: 17 வழக்குகளுக்கு சுமார் ரூ. 35.56 லட்த்திற்கு தீர்வு!

schedule
2023-03-11 | 15:11h
update
2023-03-11 | 15:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Lok Adalat in Perambalur District For 17 cases around Rs. 35.56 Lac solution!

பெரம்பலூர் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ. பல்கீஸ் தலைமையில் நடந்தது. மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலரும் சார்பு நீதிபதியும்(பொ) எஸ். அண்ணாமலை முன்னிலை வகித்தார். மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி எஸ். முத்துகுமரவேல், குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆர். சங்கீதாசேகர், ஆகியோர்களை ஒரே அமர்வாக அமைக்கப்பட்டு. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரித்து தீர்வு காணப்பட்டது.

Advertisement

மோட்டர் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார்க்கு மக்கள் நீதிமன்றத்தில் 81 வழக்குகளில் 17 வழக்குகள் தீர்வு காணப்பட்டு தீர்வு காணப்பட்டு, ரூ.35,56,500/- க்கான 17 வழக்குகளின் உத்தரவு சான்று வழங்கப்பட்டது. இதில், அட்வகேட் அசோசியேசன் தலைவர் மணிவண்ணன், வழக்கறிஞர்கள் திருநாவுக்கரசு மற்றும் அருணன் உட்பட அனைத்து வழக்கறிஞர்களும், காவல் துறையினர், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளார்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.08.2026 - 21:15:40
Privacy-Data & cookie usage: