பெரம்பலூர் மாவட்டத்தில் லோக் அதாலத்; சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவிப்பு!

schedule
2025-09-11 | 15:04h
update
2025-09-11 | 15:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Lok Adalat in Perambalur district; Legal Services Commission announcement!

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் குன்னம், வேப்பந்தட்டை ஆகிய நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து முடித்துக்கொள்ள அரிய வாய்ப்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் (National Lok Adalat) வரும்13.09.2025 தேதியன்று நடைபெற உள்ளது.

வழக்காடிகள் இந்த மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் (சமாதானமாக போக்கூடிய வழக்குகள்) நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக செல்ல ஓர் அறிய வாய்ப்பாக அமைய உள்ளது.

Advertisement

தரப்பினர் நீதிமன்ற கட்டணமாக செலுத்தியுள்ள முழுத்தொகையையும் திருப்பி பெற்றுக்கொள்ளலாம். சமரசமாக அன்றைய தினமே தீர்ப்பு நகல் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். நீர்ப்பு (AWARD) க்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. தரப்பினருக்குகளுக்கு வெற்றி தோல்வி என்ற மனப்பான்மை ஏற்படாது. எனவே, பொதுமக்கள் வழக்காடிகள் 13.09.2025-ல் தேதியன்று நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தங்கள் வழக்குகளுக்கு சமரசம் செய்வதற்கான அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு சட்டப் பணிகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இது சம்மந்தமாக, தினந்தோறும் சமரசப் பேச்சுவார்த்தை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு. பெரம்பலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-296206 / 04328-291252 என்ற தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு, அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.08.2026 - 13:23:18
Privacy-Data & cookie usage: