வெவ்வேறு இடங்களில் வீடுகளின் பூட்டுகளை உடைத்து நகை பணம் கொள்ளை; பெரம்பலூர் போலீசார் விசாரணை!

schedule
2023-05-22 | 19:26h
update
2023-05-22 | 19:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Looting of jewels and money by breaking the locks of houses at different places; Perambalur police investigation!

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராத்தை சேர்ந்தவர், விஸ்வநாதன் மகன் சுரேஷ் (40), கார்பெண்டர். பெருமாள் கோவில் அருகே உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு 6 மாதமாக குடியிருந்து வருகிறார். மனைவி மீனாட்சி (36) மகள் தக்க்ஷயா (10 ), மகன் மகிலேஷ் (8) ஆகியோரை கடந்த 19ம் தேதி, ஆத்தூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு, இன்று மாலை 4.45 மணிக்கு திரும்ப வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டை உடைத்து, திறக்கபட்டு, வீட்டினுள் இருந்த சுமார் 3 பவன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 5 ஆயிரம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

Advertisement

இதே போல, பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் எழில் நகரை சேர்ந்தவர் பாலக்கிருஷ்ணன் (45), சென்டிரிங் வேலை செய்து வருகிறார். அரியலூரில் நடந்த அவரது மச்சினன் திருமணத்திற்கு சென்று விட்டு இன்று காலை வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் வீட்டினுள் இருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 50 ஆயிரத்தை எடுத்து சென்றிருப்பது. தெரியவந்தது.

இந்த இரு கொள்ளை சம்பவங்கள் குறித்தும், வழக்குப் பதிவு செய்த போலீசார், மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்னர். இச்சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 02:52:29
Privacy-Data & cookie usage: