பெரம்பலூர் அருகே லாரி

பைக் மோதல்: வாலிபர் பலி!

schedule
2024-02-21 | 16:38h
update
2024-02-21 | 16:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Lorry-bike collision near Perambalur: Teenager killed!

பெரம்பலூர் மாவட்டம், காரியானூர் கிராமம், ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ஆசைத்தம்பி (38), இன்று பைக்கில் பெரம்பலூரை நோக்கி வந்து கொண்டிருந்த போது, எசனை ஏரிக்கரை பகுதியில், பெரம்பலூரில் இருந்து கிருஷ்ணாபுரத்திற்கு சென்ற லாரி மீது ஆசைத்தம்பி வந்த பைக் மோதி விபத்திற்குள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார், ஆசைத்தம்பியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப் பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரான விழுப்புரம் மாவட்டம், விராட்டிகுப்பத்தை சேர்ந்த தங்கராசு என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 17:18:26
Privacy-Data & cookie usage: