பெரம்பலூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு லாரி டிரைவர் பலி

schedule
2017-11-05 | 06:23h
update
2026-06-05 | 08:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Lorry driver kills Dengue fever near Perambalur

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் கிராமத்தை சேர்ந்தவர் கோடாலி மகன் வீரமுத்து (உத்தேச வயது 48). லாரி டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முறையே கிருஷ்ணாபுரம், பெரம்பலூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த வீரமுத்து நேற்று மாலை உயிரிழந்தார். அவரது உடல் உடும்பியம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 08:20:01
Privacy-Data & cookie usage: