பெரம்பலூர் காவலர் குடியிருப்பில் காதல் தகராறு; வெவ்வேறு ஊர்களுக்கு பணி மாற்றம்!

schedule
2021-08-20 | 13:07h
update
2021-08-20 | 13:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Love affair at Perambalur police Staff quarters; Change of job to different towns!

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தலில் காவலர்கள் குடியிருப்பு உள்ளது. இதில், நூற்றுக்கும் அதிகமான காவலர்கள் குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். காவலர்களாக பணிபுரிந்து வரும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆண் போலீசும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் போலீசும், காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலனிடம் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக காதலி விலகி கொண்டார். இதில் காதலனை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளவும் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் அவரும் வேறு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். அடுக்கு மாடி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்த நிலையில் காதலன் காதலியிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்க முயன்று வந்துள்ளார். இதில் சௌந்தர்யா விலகிச் சென்று, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மற்றொருவருடன் தனிமையில் பேச்சு வார்த்தையில் இருந்துள்ளார்.

Advertisement

நேற்று முன்தினம் இரவு காவலர் குடியிருப்பிற்கு போலீஸ்காரர் வந்தபோது தனது முன்னாள் காதலி, அவரது வீட்டில் வேறு ஒருவருடன் தனிமையில் இருப்பதை அறிந்த அவர் வெகுண்டு எழுந்து முன்னாள் காதலி மற்றும் அவருடைய காதலனையும் தாக்கியுள்ளார். இந்த தகவல் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவரவே உடனடியாக போலீஸ்காரரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், பெண் போலீசை கரூர் மாவட்டத்திற்கும் பணி மாற்றம் உத்தரவு பிறப்பித்து அனுப்பி வைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 09:01:03
Privacy-Data & cookie usage: