காதல் விவகாரம்: இரு குடும்பத்தினரிடையே மோதல்

2 பேர் கைது!

schedule
2022-04-17 | 16:36h
update
2022-04-17 | 16:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Love affair: Clash between two families – 2 arrested!

பெரம்பலூர் மாவட்டம், உடும்பியம் அருகே உள்ள கள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி, கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த செங்கான் என்பவரை காதலித்து உள்ளார். பிரியதர்ஷினியும் செங்கானும் ஒரு மாதம் முன்பு வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

பிரியதர்ஷினியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காதல் ஜோடியை அழைத்து வந்து சமசரம் பேசியதில் இருவரும் அவரவர் வீட்டுக்கு செல்வதாக கூறியதன் பேரில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement

ஆனால், இந்நிலையில் நேற்று, காலை சுமார் 11.00 மணியளவில் பிரியதர்ஷினியும் செங்கானும் காதலிப்பதாகவும், இதனால் மீண்டும் தங்களது வீட்டை விட்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது. இதனையறிந்து கோபமுற்ற பிரியதர்ஷினியின் உறவினர்கள் நேற்றிரவு 9 மணியளவில், செங்கான் வீட்டுக்கு சென்று அவரது தம்பி சுள்ளான் என்பவரை தாக்கியுள்ளனர். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சுள்ளான் கொடுத்த வாக்கு மூலத்தின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரியதர்ஷினியின் உறவினர்கள் 2 பேரை கைது செய்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 13:49:13
Privacy-Data & cookie usage: