பெரம்பலூர் அருகே குடிநீருக்காக சாலைமறியல் கண்டு கொள்ளாமல் சென்ற எம்.எல்.ஏ!

schedule
2017-03-14 | 08:43h
update
2026-06-27 | 00:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

M.L.A., ignored, the roadblock near in Perambalur for drinking water!

பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமம், ராஜுவ் காந்தி நகரை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் இருமுறை மனு கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Advertisement

ஆனால், மாவட்ட ஆட்சியரோ, மற்ற வளர்ச்சி துறை அலுவர்களோ குடிநீர் முறையான வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை எளம்பலூர் – பெரம்பலூர் சாலையில் சாலைமறியிலில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதே ஊரை எம்.எல்.ஏ .இராதமிழ்ச்செல்வன் பொதுமக்களை விசாரித்துள்ளார். பின்னர், அமைதியாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால், கோபமுற்ற மக்கள் அப்பகுதியில் இருந்த அனைத்து மக்களும் ஒன்று திரண்டு சாலைமறியல் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் வழங்குவாதாக உறுதியளித்தன் பேரில் கலைந்து சென்றனர். பின்னர், மாவட்ட ஆட்சியரிடமும் மீண்டும் மூன்றாவது முறையாக மனு கொடுத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 00:49:39
Privacy-Data & cookie usage: