பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா தீபதிருவிழா

schedule
2019-12-11 | 05:19h
update
2022-05-29 | 20:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Maha Deepa Festival at the Elambalur Brahmarishi hill near Perambalur

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் தீபத்திருவிழாவை யொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது.

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருநாளில் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

Advertisement

கார்த்திகை தீபநாளான நேற்று காலை 6 மணிக்கு கஜ பூஜை, கோ பூஜையும், 7 மணிக்கு 210 சித்தர்கள் யாகமும், காலை 10.30 மணிக்கு பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலிலிருந்து யானை மீது தீபம் ஏற்றும் செப்பு கொப்பரை வைத்து சித்தர் பஞ்சலோக சிலையுடன் சிவ பூதன வாத்தியங்களுடன் ஊர்வலம் நடைபெற்றது.

மேலும் சிவனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றதும் பிரம்மரிஷி மலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மலை மேல் மாலை 6 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி மகாதீபம் கொண்டு செல்ல
ப்பட்டது அன்னை சித்தர்கள் ராஜ்குமார் சுவாமிகள் தலைமையில் மலையின் மேல் 1,008 மீட்டர் நீளமுள்ள திரி மற்றும் 3 ஆயிரம் கிலோ நெய், 50 கிலோ கற்பூரம்கொண்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து எஸ்பி நிஷாபார்த்திபன், மாவட்ட தலைமை நீதிபதி மலர்விழி, எம்.எல்.ஏ ஆர். தமிழ்ச்செல்வன் ஆகியோர் சாதுகளுக்கு வஸ்திர தானம் வழங்கினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, சிதம்பரம் கோர்ட் நீதிபதி கருணாநிதி பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மகாசித்தர்கள் டிரஸ்ட் இனை நிறுவனர் ரோகிணி மாதாஜி, இயக்குனர்கள்
சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 02:55:34
Privacy-Data & cookie usage: