மகளிர் சக்தி மைய, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணி: பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா தகவல்

schedule
2020-09-26 | 03:42h
update
2020-09-26 | 03:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Women Power Center, (Mahila Sakthi Kendra) District Coordinator can apply for the job: Perambalur Collector V. Santha Information

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:

பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் மகளிர் சக்தி மையம் திட்டத்தின்கீழ் பணிபுரிய காலியாக உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ) பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

மனித வளத் துறை, சமூக அறிவியல் (Masters in the Field Humanities & social science) திட்டம் பற்றிய புரிதலோடு சமூக நல பணிகளில் முதுகலைப்பட்டம் ( MSW) பெற்றிருக்க வேண்டும். மேலும், பெண்களை முன்னிலைபடுத்தும் திட்டங்களை பற்றி அறிந்திருத்தல் வேண்டும். மாவட்டத்தில் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை நன்கு புரிந்து செயலாற்றும் திறனுடன், கணினியில் பணிபுரியும் அளவிற்கு திறன் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 35-க்குள் இருத்தல் வேண்டும். பெண்களுக்கும், மாவட்டத்திற்குள் வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை உண்டு.

மேற்கண்ட கல்வித் தகுதி உடையவர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 01.10.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 06:09:54
Privacy-Data & cookie usage: