மலையாளப்பட்டி : சின்னமுட்லு அணை திட்டத்தளத்தை மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆய்வு

schedule
2017-10-04 | 10:48h
update
2026-06-13 | 02:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Malaiyalapatti: cinna mutlu dam construction field district collector, Perambalur MLA Survey

பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட சின்னமுட்லு பகுதியில் கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் திட்டம் தொடர்பாக திட்டத்தளத்தை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

Advertisement

பணிகள் குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டறிந்தனர். மேலும், இத்திட்டத்தினை விரைவுபடுத்துமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

நடப்பு நிதியாண்டில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கையில் தமிழக முதலமைச்சரால் 28.06.2017 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இத்திட்டம் தொடர்பாக ஆய்வு பணிக்காக ரூ.10 லட்சம்- ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பொதுப் பணித் துறையின் மூலம் ஆய்வு பணிக்கான திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்திற்கு செய்து அரசிடம் சமர்ப்பிக்கபட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின்போது வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் மற்றும் அரசுத் துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 02:53:51
Privacy-Data & cookie usage: