பெரம்பலூர் அருகே பேருந்து கண்ணாடியை உடைத்தவர் கைது!

schedule
2022-01-29 | 11:31h
update
2022-01-29 | 11:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Man arrested for breaking glass in bus near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையத்தில், பெரம்பலூரில் இருந்து அரியலூருக்கு சென்ற அரசு பேருந்தின் கண்ணாடியை கல் எறிந்து உடைத்தவரை போலீசாரை செய்தனர். பின்னர், அவரிடம், நடத்திய விசாரணையில், கீழப்புலியூர் அருகே உள்ள முருக்கன்குடியை காலனி சேர்ந்தவர் பாலமுருகன் (50), இவர் 45 வருடங்களுக்கு முன்னர் சென்னை வியாசர்பாடியில் தங்கி ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். இவருக்கு அமுதா (40) என்ற மனைவியும் அருண்குமார் (17) , ஜான் (16) என்ற இரு மகன்களும் உள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பலமுருகன் மனைவியுடன் சண்டை போட்டு கொண்டு தனது சொந்த ஊரான முருக்கன்குடிக்கு வந்து தங்கியுள்ளார். குடிபோதையில் இருந்ததால், அரசின் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக தெரிவித்தார். இது குறித்து பேருந்தின் டிரைவர் கணேஷ்ராஜா (45), கண்டக்டர் ராஜேந்திரன் இருவரும் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். குடிபோதையில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 23:13:55
Privacy-Data & cookie usage: