பெரம்பலூர் அருகே வகுப்பறையில் மாணவியின் கையை பிடித்து இழுத்த நபர் கைது!

schedule
2022-02-07 | 09:03h
update
2022-02-07 | 09:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Man arrested for grabbing student’s hand in classroom near Perambalur

Advertisement

பெரம்பலூர் அருகே வெண்பாவூரில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று காலை 8.30 மணிக்கு வகுப்பறைக்கு வந்த மாணவியை, அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் மகன் தியாகராஜன் (28), குடிபோதையில் வேண்டும் என்றே கையை பிடித்து இழுத்துள்ளார். மாணவி சத்தம் போட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் வாலிபரை தர்ம அடி கொடுத்தனர். ஆசிரியர்கள், கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கை.களத்தூர் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவியை வகுப்பறையில் கையை பிடித்து இழுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 15:21:26
Privacy-Data & cookie usage: