பெரம்பலூர் அருகே பஸ் கண்டக்டரிடம் பணத்தை திருடியவர் கைது!

schedule
2022-06-22 | 18:13h
update
2022-06-22 | 18:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Man arrested for stealing money from bus conductor near Perambalur

அரியலூரில் இருந்து பெரம்பலூருக்கு வந்த அரசு பேருந்தில் வந்த பயணி ஒருவர், அழகிரி பாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்த போது பஸ் கண்டக்டரிடம் பணத்தை திருடி உள்ளார். இதனை கேட்ட போது, ரூ. 800 கொடுத்த அந்த நபர் மீத பணத்தை தராமல் பேருந்தில் இருந்து தப்பி ஓடினார். பொதுமக்கள் அவரை துரத்தி சென்ற போது, சோளக்காட்டில் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கண்டக்டர் பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் திருச்சி காந்தி நகர் எதிர்ப்புறம் உள்ள சிந்தாமணியை சேர்ந்த ராஜதுரை என்வரின் மகன் விஜயகுமார் என்பது தெரிய வந்தது. பின்னர், கைது செய்து விஜயகுமாரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 22:29:33
Privacy-Data & cookie usage: