சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது: பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

schedule
2023-04-14 | 13:29h
update
2023-04-14 | 13:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Manimekalai Award for Community Organizations: Perambalur Collector Announcement!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கள பகுதி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர்ப்புற அளவிலான கூட்டமைப்புகளில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்குவதற்கு சமுதாய அமைப்புகள் தேர்வு செய்யப்பட உள்ளது.

Advertisement

எனவே, சிறந்த முறையில் குழு கூட்டங்கள், நிர்வாக சுழற்சி முறை மாற்றம், நிதி வரவு-செலவு, மேற்கொள்ளும் தொழில், தரம் மற்றும் தணிக்கை, வங்கி கடன், அடிப்படை பயிற்சி மற்றும் தொழில்கள் பயிற்சி , விழிப்பணர்வு விவரங்கள், சமுதாய மேம்பாட்டு பணியில் ஈடுபட்ட விவரம், கிராம சபை பங்கேற்பு, மாற்று திறனாளி மற்றும் முதியோர் மேம்பாட்டில் பங்கு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதியை சேர்ந்த சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்புச்சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திலும் ஏப்ரல் 06 முதல் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம். ஏப்ரல் 25-ம் தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04238-225362 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். என தெரிவித்துள்ளார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 14:18:27
Privacy-Data & cookie usage: