Manuniti vacistapurm special camp: welfare assistance worth Rs 1.57 crore

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா குன்னம் வட்டம் வசிஷ்டபுரம் கிராமத்தில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு தலைமையில் நடைபெற்றது.

இச்சிறப்பு மனுநீதி நாள் விழாவை முன்னிட்டு 333 மனுக்கள் பெறப்பட்டு, 198 மனுக்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 117 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 18 மனுக்கள் மீது உரிய விசாரணை நடந்து வருகின்றது. இம்மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுந்த பதில் அலுவலர்கள் மூலமாக 30 நாட்களுக்குள் தெரிவிக்கப்பட உள்ளது,

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கட்டுமானப் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனி நபர் இல்லக் கழிவறை அமைத்தல் திட்டங்களின் கீழ் ரூ.31,40,00 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய பணிகளுக்கான பணி ஆணைகளையும்,

கால்நடைப் பராமரிப்புத் துறையின் கீழ் 10 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் மூலம் ரூ.12,95,000- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவுத் துறையின் பயிர்க்கடன் திட்டம் மூலம் 19 பயனாளிகளுக்கு ரூ.5,07,585- கடன் உதவி தொகையும், தாட்கோவின் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.15,23,820- மதிப்பிலான வாகனங்களையும்,

தோட்டக்கலைத்துறையின் தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிர் கடன் வழங்குதல், நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 19 பயனாளிகளுக்கு ரூ.23,35,780- மதிப்பிலான நலத்திட்டங்களும், புதுவாழ்வுத் திட்டத்தின் தனிநபர் கடன் வழங்குதல்,

அமுதசுரபி கடன் வழங்குதல் திட்டங்களின் மூலம் 32 பயனாளிகளுக்கு ரூ.10,20,000- மதிப்பிலான கடன் தொகையும், வருவாய்த்துறையின் சாலை விபத்து நிவாரணம் வழங்குதல், நத்தம் இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல்,

சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நலிந்தோர் குடும்ப நல நிதி வழங்குதல், திருமண உதவித் தொகை வழங்குதல், இயற்கை மரண உதவித் தொகை வழங்குதல் போன்றவற்றின் மூலம் 131 பயனாளிகளுக்கு ரூ.27,09,000- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத் துறையின் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய எண்ணெய் வித்துக்கள் திட்டம் போன்றவற்றின் கீழ் 29 பயனாளிகளுக்கு ரூ.32,44,844- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என 283 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,57,76,029- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அரசு அலுவலர்கள் வழங்கினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!