பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே உள்ள மருதடியில் இருந்து ஈச்சங்காட்டிற்கு செல்லும் சாலை 10 ஆண்டுகளுக்கும் மேல் சீரமைக்காத காரணத்தால் அந்த கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மருதடி கிராமத்தில் இருந்து ஈச்சங்காட்டிற்கு செல்லும் சாலை நாட்டார்மங்கலம் வழியாக செட்டிகுளம் மற்றும் ஆலத்தூர் சாலையை இணைக்கிறது. நாள் தோறும் விவசாயிகள் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பெரம்பலூருக்கு சென்று வர இந்த சாலையை பயன் படுத்துகிறார்கள்.
இப்பகுதிக்கு ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. போக்குவரத்து வசதி குறைந்துள்ள இந்த கிராமத்திலிருந்து பொதுமக்கள் இரண்டு சக்கர வாகனங்களில் தான் செல்லும் நிலையில் உள்ளனர். மழை பெய்தால் சாலையில் தண்ணீர் நிறைந்துவிடும் பள்ளங்கள் தெரியாத நிலையால், அவசரத்திற்கு மருத்துவனைக்கு செல்லக்கூட தாமதமாகி விடுகிறது
இது குறித்து, பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு பல ஆண்டுகளாகவே சீரமைக்காத சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.