mass contact-poolambadi-collectorபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி பேரூராட்சியில் மனுநீதி நிறைவு நாள் நிகழச்சி மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் பேசியதாவது:

பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்ப்பதற்காகவும், தமிழக அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் விரிவாக எடுத்துறைக்கவும் மாதந்தோறும் மனுநீதி நிறைவுநாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது.

கடந்த ஒரு மாதகாலமாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டுள்ள மனுக்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

மேலும் இன்று பெறப்படும் மனுக்களின் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கிடவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார;.

இந்நிகழச்சியில் முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 நபர்களுக்கு ரூ.1,09,963 நலத்திட்டங்களையும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரண ஈமச்சடங்கு நிதியுதவியாக ரூ12,500 வீதம் 4 நபர்களுக்கு ரூ50,000 க்கான காசோலைகளையும், திருமண உதவித் தொகையாக 8 நபர்களுக்கு தலா.ரூ.8000 வீதம் ரூ.64 ஆயிரத்திற்கான காசோலைகளையும், வேளாண்மைத் துறையின் மூலம் 5 நபர்களுக்கு ரூ.7,25,000-மதிப்பிலான வேளாண் பொருட்களையும்,

பிற்பட்டோர் நலத்துறையின் மூலம் 7 நபர்களுக்கு ரூ.27,202 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், 69 நபர்களுக்கு ரூ.13,80,000 மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 13 நபருக்கு நத்தம் பட்டா நகலையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 9 நபருக்கு ரூ.14,72,532 மதிப்பிலான வேளாண் இடுபொருட்களையும், புதுவாழ்வுவுத்திட்டத்தின் மூலமாக 13 நபர்களுக்கு கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தனிநபர் கடன் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2,10,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,

கூட்டுறவுத்துறையின் மூலம் 5 நபர்களுக்கு ரூ.47,600 மதிப்பிலான பயிர் கடன்களையும், பால்வளத்துறையின் மூலம் பால் உற்பத்தியாளர்கள் 3 நபர்களுக்கு ரூ.33,608 மதிப்பிலான நலத்திட்டங்களையும்,

வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் இந்திரா நினைவு குடியிருப்புத்திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடு கட்ட் 45 நபர்களுக்கு ரூ.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவா;கள் வழங்கினார்.

மேலும், 8 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் தாட்கோ மூலம் 2 நபர;களுக்கு ரூ.11,48,183 மதிப்பிலான வாகனங்களையும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 27 நபர்களுக்கு கிணறு வெட்டுதல், வெங்காய பட்டறை அமைத்தல் மற்றும் பைப் லைன் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்காக ரூ.33,74,800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆகமொத்தம் 303 பயனாளிகளுக்கு ரூ.2,14,50,041 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

முன்னதாக அனைத்துத்துறை அலுவலர்களும் தங்கள் துறைகளின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களைப்பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், எங்கு விண்ணப்பிக்க வேண்டும், அதற்கான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

பின்னர் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைபராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, பூலாம்பாடி பேரூராட்சித் தலைவி செல்வலட்சுமி, தனித்துணை ஆட்சியர்கள் (சமூக பாதுகாப்புத்திட்டம்) முருகேஸ்வரி, (சிறப்புத்திட்டம்) சிவப்பரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சந்திரன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் நாகஜோதி, தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் இராஜாமணி உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!