உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவினர் அதிகளவில் போட்டியிட வேண்டும்; துரை. வைகோ எம்.பி பேச்சு!

schedule
2026-10-22 | 10:03h
update
2026-10-22 | 10:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

MDMK members should contest in large numbers in the local body elections; says MP Durai Vaiko!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அஸ்வின் பார்ட்டி ஹாலில் மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் செ.துரைராஜ் தலைமையில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட பொருளாளர் பேரளி சி.சரணவன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் கே.எஸ். ரெங்கராஜ், பி.மங்கையர்கரசி, பாண்டியன், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரியலூர் மாவட்ட செயலாளர் க.ராமநாதன், மாநில விவசாய அணி செயலாளர் வாரணாசி கி.ராஜேந்திரன், உயர்நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா ஆகியோர் சிறப்புரையாற்றினர். திமுக முதன்மைச் செயலாளர் துரை.வைகோ எம்.பி பேசியதாவது:

மதிமுகவில் சாதி, மதம் இல்லை. அனைவரும் மதிமுக குடும்பம்தான். அனைவரும் சமம்தான். சீமக்கருவேல முட்களை ஒழித்தது. தூத்துக்குடியில் மக்களுக்கு நச்சு கக்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூட செய்தது பல்வேறு விசயங்களை பட்டியிடலாம். மதிமுகவினர் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும், தமிழக மக்களுக்காக நல்ல பல விசயங்களை செய்ததில் பெருமை கொள்ளலாம். எனக்கு அரசியல் பிடிக்காது. ஆனால், எனது தந்தைக்காகவும், உங்களுக்காகவும் அரசியலில் பயனிக்கிறேன். இன்னைக்கு பொறுத்தவரைக்கும் இந்த அடுத்த என்ன வருது? உள்ளாட்சி தேர்தல். உள்ளாட்சி தேர்தல் வரும்பொழுது பல பேருக்கு இப்போ நல்ல வாய்ப்பு. ஏன்னா முன்னாடி எல்லாம் பணம் இருந்தாதான் ஜெயிக்க முடியும்.. அப்படிங்கறதை விட்டுட்டு இன்னைக்கு ஜனங்க பணத்தை வாங்கிட்டு இன்னைக்கு மாத்தி குத்தாறாங்க. அது நல்ல விஷயம்.ஜனங்கள் எதுக்கு பணம் வாங்குறாங்க? நம்பிக்கை இல்லை. சும்மா ராவணனானாலும் ஒன்னுதான், ராமனானாலும் ஒன்னுதான். நம்மளுடைய வாழ்வாதாரம் இதுதான் இப்படியே இருக்கப்போகுது. சரி இவர்கிட்ட ஒரு 1000 வாங்கலாம், இவர்கிட்ட ஒரு 1000 வாங்கலாம். இவருக்கு ஒரு ரெண்டு ஓட்டு, அவருக்கு ஒரு ரெண்டு ஓட்டு அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனால், இன்னைக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவர் வந்தால் நல்லாட்சி இருக்கும். இவர் வந்தால் லஞ்சம் லாவண்யம் இல்லாத ஒரு ஆட்சி இருக்கும். அப்படின்னு ஒரு நம்பிக்கை நீங்க ஏற்படுத்துறீங்க. அந்த ரூபாய் கொடுத்தவங்க கிட்டயும் ரூபாயை வாங்கிட்டு மாத்தி குத்தி விட்டுறாங்க.

Advertisement

இது வந்து பொறுத்தவரைக்கும் என்னன்னா ஒரு நல்ல ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கு தமிழ்நாட்டுல. இந்த வாய்ப்பை, இந்த தருணத்தை நம்ம பயன்படுத்தி இருக்கோம். பல பேருக்கு பல இந்த இந்த தேர்தல் கொடுப்பதோட முக்கியமான நோக்கம் என்னன்னா அடுத்த ஒரு உள்ளாட்சி தேர்தல்தான். இது மறுமலர்ச்சி திமுக உடைய அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும். தயவுசெய்து நீங்க வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்ய தயாரானவர்கள் மட்டும்தான் போட்டி போடுங்க. பேருக்கு போட்டியிடதீர்கள். ஏதாவது ஒரு கவுன்சிலர் ஆனாலோ இல்ல நம்ம ஊராட்சி மன்ற தலைவர் ஆனாலோ ஒரு பேருக்காண்டி பண்ணாதீங்க! சம்பாதிக்கிறதுக்காண்டி பண்ணாதீங்க!

இந்த தருணத்தை பொறுத்தவரைக்கும் நீங்க ஜெயிக்கிறீங்களா? சிம்மாசனம் உங்களுக்கு வரும், அது சந்தோஷம்தான். அதே வேளையில அந்த பகுதி மக்களுக்கு உங்களுடைய சேவை இருக்கணும். நான் கண்டிப்பா செய்வேன். எனக்கு தனிப்பட்ட தொழில் இருந்தாலும் இதுக்கு இவ்வளவு நேரமானாலும் நானு செலவு பண்ணுவேன். நேரத்தை செலவு பண்றது, பொருளாதாரத்தை செலவு பண்றது கிடையாது. அதற்கு இருக்கிறவங்கதான் தயவுசெய்து போட்டி போடுங்க. நீங்க ஒரு மாற்றத்தை உருவாக்கணும். நீங்க இந்த தடவை வந்து வாய்ப்பு கொடுக்கிறாங்க இன்னொன்னு சொல்லிடுறேன். சட்டமன்ற உறுப்பினர்களை விட, நாடாளுமன்ற உறுப்பினர் விட இது எல்லாத்துடைய பவர்ஃபுல்லா இருக்குறது அதிக சக்தி பொருந்து பெற்றது உள்ளாட்சித் துறை. தயவுசெய்து தெரிஞ்சுக்கோங்க. ஒரு எம்பினால திருப்தி படுத்தக்கூடிய ஆறு சட்டமன்ற தொகுதிக்கு மேம்பாட்டு நிதி 5 கோடி கொடுக்கிறார்கள். ஆறு சட்டமன்றத்தை நீங்க பிரிச்சீங்கன்னா தொகுதிக்கு 80 லட்சம். ரெண்டு நீங்க ஒரு ஒர டேங்க் வாட்டர் டேங்க் கட்டுனா முடிஞ்சு போச்சு. அதோட. பெருசா ஒன்னும் செஞ்சிட முடியாது. ஏன் திருச்சி தொகுதியில 4000 கிராமங்கள் இருக்கு. எவ்வளவு செஞ்சிட முடியும்? ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கு வருஷம் மூணு கோடி இருக்கு. அதை வச்சே பண்ண முடியாது, பெருசாவே திருப்தி படுத்திட முடியாது. ஆனால், ஒரு உள்ளாட்சி அமைப்புல ஊராட்சி மன்ற தலைவர் ஆகலாம், ஒரு கவுன்சிலர் இருந்தீங்கன்னா கண்டிப்பா அந்த பகுதியை சேர்ந்த ஒரு 5000 அல்லது 10000 முதல் 20000 பேரை நீங்க திருப்தி படுத்தலாம். அதுக்குண்டான சக்தி இருக்கு, நிதி இருக்கு. அதை நீங்கள் பயன்படுத்திக்கோங்க.

நம்ம மதிமுகவை சேர்ந்த திருச்சில முஸ்தபான்னு ஒருத்தர் இருக்காரு, உங்களுக்கு தெரியும் மாத்தலையே என்னன்னு தெரியல. ஐந்து, ஆறு முறை ஒரே கவுன்சிலர் இருக்காங்க. அது எப்படி? நம்ம வாய்ப்பு கூட்டணி கட்சி சொன்ன சமயம் வாய்ப்பு மறுக்கப்பட்ட போது கூட அவர் தனியா நின்னு ஜெயிச்சிருக்காரு. அதுல பல பேர் இருக்குறாங்க. அது தனிப்பட்ட செல்வாக்கு. கட்சிதான் ஒரு தடவை கட்சி வாய்ப்பு கொடுக்குது. அந்த வாய்ப்பை பயன்படுத்திட்டு மக்கள் சேவை மூலம் அவங்களுடைய அந்த அவங்களுக்கு ஒரு அரசியல உருவாக்கிக்கிறாங்க. அரசியல்ல சொல்றோம் பாருங்க உருவாக்கிக்கிறாங்க, உருவாக்கிக்கிறாங்க. உங்களுக்கு ஒரு அரசியல் செல்வாக்கு உருவாகும்போது கட்சியும் பயனடையும். அவ்வளவுதான். அதனாலதான் நீங்க இந்த தடவை நான் பார்க்கணும். மாவட்ட செயலாளர்கள் தயவுசெய்து மக்களுக்காக சேவை செய்யக்கூடியவர்கள், நீங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நிறைய பேசினார்.

முன்னதாக, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.கே. முத்து, பம்பரம் பழனிமுத்து, ஆர். ராஜசேகர், ஆசிரியர் துரைராஜ், லப்பைக்குடிக்காடு நகர செயலாளர் ஆர்.முபாரக், ஒன்றிய செயலாளர்கள் வேப்பந்தட்டை கிழக்கு எஸ்.ஆறுமுகம், பெரம்பலூர் தெற்கு துரை.ஜெயக்குமார், வடக்கு சே.பிரபாகரன், வேப்பூர் வடக்கு ரெங்கராஜ், தெற்கு வெண்மணி – மணி, ஆலத்தூர் கிழக்கு கிருஷ்ணமூர்த்தி, மேற்கு முக்கடல் ராஜ்மோகன் மற்றும் கட்சி முன்னோடிகள், அணி பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு தீர்மானங்களை ஆசிரியர் எபினேசர் வாசித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.10.2026 - 10:49:42
Privacy-Data & cookie usage: