தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம் மார்ச் 18 வரை நீட்டிப்பு

schedule
2017-03-16 | 06:23h
update
2026-06-27 | 08:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Measles rubella vaccination camp extension until March 18

பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ப.சம்பத் விடுத்துள்ள தகவல் :

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தது. மாநிலம் முழுவதும் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள, 1.5 கோடி குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 1.10 லட்சம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் பெற்றோர்களின் வசதிக்காகவே மேலும் இந்த முகாம் மார்ச் 18-ம் தேதி சனிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உங்கள் குழந்தைகளை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டு பயனடையலாம், என தெரிவித்துள்ளார்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 08:12:33
Privacy-Data & cookie usage: