மாநில அளவிலான கைப்பந்து போட்டி; வெற்றி பெற்ற வீராங்கணைகள் பெரம்பலூர் ஆட்சியருடன் சந்திப்பு

schedule
2019-12-06 | 15:31h
update
2019-12-06 | 15:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Meet the Perambalur Collector has won the Players, statewide games

மாநில அளவிலான 37-வது பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் விளையாட்டு விடுதியைச் சேர்ந்த கைப்பந்து மாணவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சாந்தாவை இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisement

37-வது மாநில அளவிலான பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் தலைவாசலிலுள்ள பாவேந்தர் மெட்ரிக் பள்ளியில் 2019 நவம்பர் 26 முதல் நவம்பர் 30 வரை நடைபெற்றது. இதில் 34 அணிகள் கலந்து கொண்டன. பெரம்பலூரில் உள்ள தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் நமது மகளிர் விளையாட்டு விடுதியைச் சேர்ந்த கைப்பந்து (ஹேண்ட்பால்) மாணவிகள் மிகச் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கமும், கோப்பையினை பரிசாக பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற கைப்பந்து வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் விளையாட்டு விடுதி மேலாளர் ஆர்.ஜெயகுமாரி, கைப்பந்து பயிற்றுநர் வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.06.2026 - 01:41:59
Privacy-Data & cookie usage: