பெரம்பலூரில் பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்

schedule
2018-03-26 | 07:15h
update
2026-07-05 | 04:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Meeting of the BJP in the polls custodians in Perambalur

பெரம்பலூர். மார்ச்.26-

பெரம்பலூரில் பாஜக-வின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்டத் தலைவர் சாமி.இளங்கோவன் தலைமையில் இன்று நடைபெற்றது. நகர் மண்டல் தலைவர் எஸ்.முருகேசன் வரவேற்றார்.

Advertisement

தேசிய பொதுக்குழு உறுப்பினரும், கோட்ட பொறுப்பாளருமான சிவசுப்பிரமணியன், கோட்ட இணை பொறுப்பாளர்கள் இல.கண்ணன், கே.சிவகாமி, கோட்ட அமைப்புச் செயலாளர் எஸ்.பி பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சி.சந்திரசேகரன், தடா.து. பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில அமைப்புச் செயலாளர் கேசவ.விநாயகன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் மாநிலத் தலைவர் தமிழிசை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

மாவட்ட பொருளாளர் எம்.ராஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பி.எல். அடைக்கலராஜ், எம்.ஆர்.இளங்கோவன் உள்ளிட்ட பல முக்கிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.சாமிநாதன் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 04:59:09
Privacy-Data & cookie usage: