Meeting people in Namakkal Redressal: Collector welfare benefits provided to persons with disabilities;

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்த மொத்தம் 174 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.

மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான சலவைப் பெட்டியை வழங்கினார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.4700 மதிப்பிலான சக்கர நாற்காலியையும், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.7,500 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியையும், ஒரு மாற்றுதிறனாளிக்கு ரூ.1,500 மதிப்பிலான பிராய்லி கைகடிகாரத்தையும், இரண்டு மாற்றுதிறனாளிக்கு தலா ரூ.750 வீதம் ரூ.1,500 மதிப்பிலான தாங்கிகளையும், 21 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளையும் என மொத்தம் இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) துரை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!