பெரம்பலூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவு தின கூட்டம்

schedule
2018-01-25 | 01:38h
update
2018-01-27 | 01:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Memorial Day Meeting for Language Fighters martyrs in Perambalur

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், டி.டி.வி. தினகரன் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், மாவட்ட செயலாளர் எஸ்.கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இரா.ஜீவானந்தம், வரவேற்றார்.

Advertisement

மாவட்ட அவைத் தலைவர் என்.கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார் (பெரம்பலூர்), வீரமுத்து (ஆலத்தூர்), பழனிவேல் (வேப்பூர்), சேகர் (வேப்பந்தட்டை) உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

அம்மா பேரவை துணைச் செயலாளர் எஸ்.டி.எஸ். செல்வம், தலைமை கழக பேச்சாளர் காஞ்சி பாஸ்கரன் ஆகியோர் தமிழ் மொழிக்காக பாடுபட்ட மொழிப்போர் தியாகிகள் குறித்து சிறப்புரை ஆற்றினர்.

பலவேறு மாவட்ட அணி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஒன்றிய மாணவரணி என்.வினோத் நன்றி கூறினார்.

இதே போன்று திமுக மாணவரணி அமைப்பாளர் முருகேசன் சார்பிலும், அ.இ.அ.தி.மு.க மாவட்ட மாணவரணி சார்பிலும் பெரம்பலூரில் மொழிப்போர் தியாகிளுக்கான வீரவணக்க நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.03.2026 - 22:54:26
Privacy-Data & cookie usage: