ஆ.இராசாவின் மனைவி பரமேஸ்வரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள்: அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி!

schedule
2022-05-29 | 18:56h
update
2022-05-30 | 05:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Memorial Day of A.Rasa’s wife Parameswari: including ministers paid floral tributes

திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி எம்.பியுமான ஆ.இராசாவின் மனைவி மறைந்த மு.அ.பரமேஸ்வரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,

அமைச்சர்கள் ராமச்சந்திரன், சிவசங்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக ஆ.இராசா.எம்.பி.யின் பெற்றோர்களான ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை ஆகியோரது மணி மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

Advertisement

இதில், திமுக மாவட்ட செயலாளர்கள், குன்னம் சி.இராஜேந்திரன், (பெரம்பலூர்), பா.மு.முபாரக் (நீலகிரி), மயூரிஇராசா , ஆ.ராமச்சந்திரன், ஆ.கலியபெருமாள், ஆ.சிவசண்முகம், வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகை சிவசண்முகம், ஆசிரியர் ரா. பச்சமுத்து, விஜயாம்பாள்பச்சமுத்து, ரெங்கராஜ், கமலாரெங்கராஜ், அரசு வழக்கறிஞர் சந்தானலெட்சுமி, மாநிலங்களை உறுப்பினர் ஏ.எம்.அப்துல்லா, போலீஸ் எஸ்.பி. மணி, எம்.எல்.ஏ.க்கள் பிரபாகரன் (பெரம்பலூர் ), கு.சின்னப்பா (அரியலூர்), கா.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம் ),

மாநில இலக்கிய அணி அமைப்பாளர் புலவர்.கவிதைப்பித்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மா.இராஜ்குமார், கு.சின்னதுரை, பொறியாளர் பரமேஷ்குமார், தமிழக சிறப்பு டெல்லி வழக்கறிஞர் துரை.குமணன்,

ஒன்றிய செயலாளரகள், ஒன்றிய சேர்மன்கள், பேரூர் செயலாளர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், பெரம்பலூர் நகராட்சி துணை தலைவர் ஹரிபாஸ்கர்

மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளரும்- அரசு குற்றவியல் வழக்கறிஞருமான பா.செந்தில்நாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன்.சம்பத், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் மற்றும் மேட்டுப்பாளையம், கூடலூர், அன்னூர் மற்றும் பெரம்பலூர், திருப்பூர், அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.06.2026 - 13:01:38
Privacy-Data & cookie usage: