பெரம்பலூர் அருகே கல்குவாரியில் மண் சரிந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி!

schedule
2020-03-12 | 16:17h
update
2020-03-12 | 16:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Mercenary worker killed after collapsing mud at stone quarry near Perambalur

பெரம்பலூர் அருகே கல்குவாரி மண் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை அருகே வெங்கலம் கிராமத்தில் உள்ள மலையில் செயல்பட்டு வரும் எம்ஜிஎம் கல்குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த போது, மண் சரிந்து விழுந்து, சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் செம்மலை(36), என்பவர் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து, சக தொழிலாளர்கள் செம்மலையை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில்
மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே செம்மலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து செம்மலையின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரும்பாவூர் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.06.2026 - 17:10:09
Privacy-Data & cookie usage: