வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் ஓய்வு

schedule
2016-03-31 | 17:09h
update
2026-06-22 | 19:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று ஓய்வு பெற்றதை அடுத்து , அவருக்கு பிரிவு உபச்சார விழா விமரிசையாக நடைபெற்றது.

Advertisement

60 வயது நிறைவு பெற்றதையடுத்து , சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வானிலை ஆய்வு மையத்திற்கு ரமணன் பிரியாவிடை கொடுத்தார்.

36 ஆண்டுகள் வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றிய அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இதில் 14 ஆண்டுகள் இயக்குனராக பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என குறிப்பிட்ட அவர், தன்னை மக்களுக்கு அறிமுகப்படுத்திய மீடியாக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இனி வாழ்வின் அடுத்த அத்தியாத்தை மாணவர்களுடன் கலந்துரையாட விரும்புவதாகவும் அவர் கூறினார். முன்னதாக ரமணனுக்கு பிரிவு உபச்சார விழாவில் கேக் வெட்டி, சக ஊழியர்கள் பிரியா விடை கொடுத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 19:38:09
Privacy-Data & cookie usage: