எம்.ஜி.ஆர்., 103வது பிறந்த நாள் : பெரம்பலூரில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!!

schedule
2020-01-17 | 05:59h
update
2020-01-17 | 13:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

MGR 101th Birthday Celebration: Honour to wear a garland for a statue in Perambalur !!

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலை பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன், தலைமையில் மாலை அணிவித்து கட்சியினர் மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆர் புகழ் ஓங்குக என கோசமிட்டனர்.

Advertisement

இதில் மாவட்ட அவைத்தலைவர் நெய்க்குப்பை ஆர்.துரை, மாவட்ட பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பூவை.செழியன், முன்னாள் துணை சபா நாயகர் வரகூர் ஆ.அருணாசலம், துணைச் செயலாளர் ராணி, முன்னாள் எம்.பிக்கள் மருதைராஜா (பெரம்பலூர்), சந்திரகாசி (சிதம்பரம்) எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.என்.ராஜாராம், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), வழக்கறிஞர் கணேசன், உள்ளிட்ட பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, பூலாம்பாடி வினோத், பாளையம் சரவணன், காடூர் ஸ்டாலின், அந்தூர் ராஜேந்திரன், சித்தளி கணேசன், பாடாலூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் அ.வேல்முருகன், ஏரளாமான அதிமுகவினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு உருண்டைகள் (லட்டு) வழங்கப்பட்டது. இதுபோல் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடஙகளில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் படங்களுக்கு அதிமுகவினரும், அவரது ரசிகர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல கிளைகளில் புதிய கொடியும் ஏற்றப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 19:45:17
Privacy-Data & cookie usage: