எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : ஆக.4 வரை பல்வேறு போட்டிகள் விவரம்

schedule
2017-07-14 | 07:39h
update
2026-04-29 | 21:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

MGR. Century Festival: Details of various contests up to Aug. 4

பெரம்பலூர் : முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா வரும் ஆக.5 அன்று பெரம்பலூர் நகரில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவினை அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகளிடையே பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, யோகாசனம் போன்ற போட்டிகளும், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 4 வட்டாரங்களிலும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்களும் 4 பேரூராட்சிகள் மூலமாக தூய்மைப் பணிகளும், கலை இலக்கியப்போட்டிகளும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை வாயிலாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் டேக்வண்டா, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளுக்கு செயல்முறை விளக்கம் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் 4.8.2017 வரை நடத்தப்படவுள்ளது.

அதன்படி, உயர்கல்வித்துறை சார்பில் இன்று வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரியில் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, யோகாசனம் போன்ற போட்டிகளும்,

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 15.07.2017 அன்று வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 பேரூராட்சிகளிலும் ஒட்டுமொத்த துப்புரவு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Advertisement

உயர்கல்வித்துறையின் மூலம் 17.07.2017 அன்று பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மகளிர் கலை (ம) அறிவியல் கல்லூரியில் கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, ரங்கோலி போன்ற போட்டிகளும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மூலம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளப் போட்டிகளும், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது.

18.07.2017 அன்று 4 பேரூராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் குறித்து மாணவ, மாணவிகளிடையே கட்டுரைப் போட்டியும்,

19.07.2017 அன்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் டேக்வான்டோ, சிலம்பம் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.

20.07.2017 அன்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மூலம் பெரம்பலூர் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் சிலம்பம் (தற்காப்புக்கலை) குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

21.07.2017 அன்று 4 பேரூராட்சிகளிலும் ஒட்டுமொத்த சிறப்பு துப்புரவு முகாம் நடைபெற உள்ளது. 24.07.2017 அன்று மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மூலம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகளும்,

25.07.2017 அன்று 4 பேரூராட்சிகளிலும் பள்ளி மாணவ மாணவியர்களிடையே பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. 27.07.2017 அனறு பூலாம்பாடி, குரும்பலூர் லெப்பைகுடிகாடு பேரூராட்சிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான கோலப்போட்டி நடைபெற உள்ளது.

02.08.2017 அன்று பூலாம்பாடி கலைமகள் தொடக்கப்பள்ளி, ஈச்சம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, லெப்பைக்குடிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) பள்ளிகளில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே ஓவியப் போட்டிகளும்,

04.08.2017 அன்று 4 பேரூராட்சிகளிலும் ஒட்டுமொத்த சிறப்பு துப்புறவு முகாமும் நடைபெற உள்ளது. மேலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அதிநவீன மின்னனு திரை வாகனத்தின் மூலமாக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிறப்பை போற்றும் வகையில் குறும்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டு வருகின்றன. அதில், வாழ்க்கை வரலாற்றை இன்றைய கால இளைய சமுதாயத்தினரும், அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் வாயிலாக சிறப்பு புகைப்பட கண்காட்சிகளும் நடத்தப்பட உள்ளன.

அதனைத் தொடர்ந்து பெருந்திரள் பேரணிகளும், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகளும் நடத்தப்படவுள்ளது.

பெரம்பலூரில் 05.08.2017 அன்று தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மிக எழுச்சியோடு சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளை, பொதுமக்கள் அனைவரும் கண்டுகளிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் சாந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2026 - 21:20:06
Privacy-Data & cookie usage: