எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : குடும்ப விழாவாக பாவித்து அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் : ஆட்சியர்

schedule
2017-07-14 | 14:04h
update
2026-04-30 | 21:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

MGR. Century Festival: Everybody should be able to cooperate with the family function: the collector

பெரம்பலூர் : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது.

வரும் ஆக.5 அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னாள் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அனைத்து துறை அலுவலா;களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவா; திருமதி.வே.சாந்தா,இ.ஆ.ப. அவா;கள் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற்றது.

Advertisement

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதன்படி, இவ்விழாவை சிறப்பாக நடைபெறும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளில் எவ்வித தொய்வும் இன்றி முழு ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும்.

அனைத்துத்துறை முதன்மை அலுவலர;களுகம் தங்கள் துறையின் வாயிலாக அரசின் நலத்திட்டங்களை பெற தகுதியான நபா;களை கண்டறிந்து பெருமளவில் பயனாளிகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

துறைசார்ந்த பயனாளிகளின் எண்ணிக்கை, எந்த திட்டத்தின் கீழ் நலத்திட்டம் வழங்கப்படுகின்றது என்பது குறித்த அறிக்கையினை 17.7.2017 க்குள் உதவி இயக்குநர் (கலால்) வசம் ஒப்படைக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தங்களது குடும்ப விழாவாக பாவித்து சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 21:49:37
Privacy-Data & cookie usage: