பெரம்பலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : அதிமுகவினர் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்ள வேண்டும் : ஆர்.டி.ஆர் வேண்டுகோள்

schedule
2017-07-23 | 08:04h
update
2026-04-11 | 03:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

MGR Century Festival in Perambalur: ADMK Party volunteers family should take part in the family: RTR request

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா வரும் ஆகஸ்ட் 5ந்தேதி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் நடைபெற உள்ளது.

Advertisement

இதற்கான ஆலோசனை கூட்டம் துறைமங்கலத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அனைத்து அதிமுகவினரும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ.,தமிழ்செல்வன், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), கிருஷ்ணசாமி (வேப்பூர்) உட்பட 500க்கும் மேற்ப்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.04.2026 - 03:24:14
Privacy-Data & cookie usage: