எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : சிறப்பாக நடத்த பெரம்பலூரில் ஆலோசனைக் கூட்டம்

schedule
2017-07-08 | 16:26h
update
2026-05-01 | 08:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

MGR Century Festival: A meeting in Perambalur to hold the best

பெரம்பலூர் : தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் டிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வரும்.ஆக. 05 அன்று நூற்றாண்டு விழா கொண்டாட தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

இவ்விழாவினை பெரம்பலூர் மாவட்டத்தில், விழாக் குழுவின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சாந்தா முன்னிலையில் இன்று அவ்விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட இலட்சினைகளை அரசுத்துறை வாகனங்களில் மாநிலங்களவை உறுப்பினர் ஒட்டினார். பின்னர் நுhற்றாண்டு விழா நடத்த உகந்த இடம் குறித்து பாலக்கரை அருகில் உள்ள சுந்தர் நகரில் இடத்தினை ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.இராமசந்திரன்(குன்னம்), அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்கள் மற்றும் ஒன்றிய செயவாளர்கள் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் ( வேப்பந்தட்டை), கிருஷ்ணசாமி (வேப்பூர்) அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 08:33:33
Privacy-Data & cookie usage: