MGR. century year festival is to be held best: Minister Manikantan

ராமநாதபுரத்தில் முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர்.நுாற்றாண்டு விழா தமிழக அளவில் முதன்மை மாவட்டமாக சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடத்திட வேண்டும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.

ராமநாதபுரத்தில் வரும் நவ.25 அன்று எம்.ஜி.ஆர்.நுாற்றாண்டு விழா அரசு சார்பில் நடத்தப்பட உள்ளது. விழா நடத்துவது குறித்து ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் பரக்கத் மகாலில் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமயில் நடந்தது. விழா சிறப்பாக நடத்துவது குறித்து நிர்வாகிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, எம்பி வேட்பாளரை ஆதரித்து பேசிய அதே இடத்தில் எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழா நடத்த முடிவு செய்தோம். இதற்கு அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு தந்தனர். எம்.ஜி.ஆர்.நுாற்றாண்டு விழா நடத்த நமக்க கிடைத்த அரிய வாய்ப்பு என கருத வேண்டும். அதுவும் நான் எம்.எல்.ஏ.வாகவும் அமைச்சராகவும் இருக்கும் போது கிடைத்த இந்த வாய்ப்பை நான் பெருமையாகவே கருதுகிறேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என திட்டமிட்டிருந்தார். அவரது எண்ணங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் நிறைவேற்றி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர். ஏழை எளியவர்களுக்கு அதிக உதவிகள் செய்துள்ளார். அவரது நுாற்றாண்டு விழா சிறப்பாக நடத்திட ஒவ்வொரு தொண்டர்களும் எழுர்ச்சியுடன் செயல்பட வேண்டும். குறைந்தது ஒரு லட்சம் பேர் பங்கேற்க வேண்டும். இதற்காக கிளை வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி விழாவில் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழாவை தமிழக அளவில் ராமநாதபுரம் மாவட்டம் சிறப்பாக நடத்தியது என பெயர் எடுக்கும் வகையில் நிர்வாகிகள்,தொண்டர்கள் செயல்பட வேண்டும். இதற்காக நான் என்ன உதவி வேண்டுமென்றாலும் செய்ய தயார். தொண்டர்களும், நிர்வாகிகளும் எந்நேரத்திலும் என்னை அலுவலகத்திலோ வீட்டிலோ சந்தித்து விழா சிறப்பாக நடத்த தேவையான உதவிகளை பெறலாம். ஆலோசனைகளை வழங்கலாம். உங்கள் உதவியுடன் விழா சிறப்பாக நடத்தி காட்ட நான் இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன். நாம் இணைந்து செயல்பட வேண்டும்.

விரைவில் பரமக்குடி இடைத்தேர்தல் கட்டாயம் வர உள்ளது. நமக்கு கட்சியின் இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக கிடைத்துவிடும். சின்னம் கிடைத்தவுடன் சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பிவிடுவர். அப்போது அவர்களையும் நாம் அரவனைத்து சேர்த்துக்கொள்வோம், என அவர் பேசினார்.

மாவட்ட செயலாளர் முனியசாமி, எம்பி அன்வர் ராஜா, மாவட்ட அவைத் தலைவர் முருகேசன், மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆனிமுத்து, தர்மர், சுந்தரபாண்டியன், ராமநாதபுரம் நகர் செயலாளர் அங்குசாமி, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இணை செயலாளர் சாமிநாதன், நகர் துணை செயலாளர் ஆரிப்ராஜா, மாவட்ட மத்திய வங்கி தலைவர் ஜெயஜோதி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் நாகநாதசேதுபதி, வீரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!