எம்.ஜி.ஆர்., பெரியார் நினைவு நாள்:  பெரம்பலூரில் அதிமுகவினர் கொட்டும் மழையிலும் மாலை அணிவித்து மரியாதை!

schedule
2019-12-24 | 07:30h
update
2026-07-05 | 13:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

MGR., Periyar Memorial Day plea to respect garlands, AIADMK Party carders When pouring rain !

அ.இ.அ.தி.மு.க., நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 32-வது ஆண்டு நினைவு நாளையொட்டி பெரம்பலூரில் அதிமுகவினர், மாவட்ட தேர்தல் பொறுப்பபாளரும், வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் குறளார்.மு.கோபிநாதன் தலைமையில், மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் முன்னிலையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இன்று காலை முதலே பெரம்பலூர் மாவட்டத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையும் பொருட்படுத்தாத அதிமுக தொண்டர் மழையில் நனைத்து கொண்டே மரியாதை செலுத்தினர். அங்கிருந்த பெரியார் நினைவு நாளை முன்னிட்டும் அவரது உருவ சிலைக்கும் மாலை அணிவிக்கப்பபட்டது. இதே போன்று அண்ணா, ஜெயலலிதா ஆகியோரது உருவ சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisement

இதில், பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர். தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்பிக்கள் சந்திரகாசி, மருதைராஜா, முன்னாள் எம்.எல்.ஏ, பூவை.செழியன், முன்னாள் தமிழக சட்ட சபை துணை சபாநாயகர் வரகூர் ஆ.அருணாசலம், மீனவர் அணி பிரிவு இணைச் செயலாளர் வெண்பாவூர்.தேவராஜன், ஒன்றிய செலாளர்கள் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, சிறுபான்மையினர் அணி, அண்ணா தொழிற்சங்கம் வீரபாண்டியன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தின் பல இடங்களில் அலங்கரிப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு பல்வேறு பகுதிகளில் தொண்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது போன்று, பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களில் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 13:26:04
Privacy-Data & cookie usage: