எம்.ஜி.ஆரின் 103 வது நாள் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் : பெரம்பலூர் அதிமுக நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி அழைப்பு!

schedule
2020-01-21 | 07:07h
update
2020-01-21 | 07:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

MGR’s 103rd Birthday Celebrations: invite by Perambalur AIADMK City Secretary R.Rajaboobathi

பெரம்பலூர் நகர அதிமுக செயலாளர் ஆர். ராஜபூபதி விடுத்துள்ள அறிக்கை : இன்று மாலை பெரம்பலூர் வானொலித் திடலில் அஇஅதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான (எம்.ஜி.ராமச்சந்திரன்) எம்.ஜி.ஆரின் 103 வது நாள் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நகர சார்பில் நடக்கிறது.

Advertisement

கழக அமைப்புச் செயலாளரும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளருமான எம்.பரஞ்ஜோதி, பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் , மாவட்ட மாணவரணி செயலாளரும், பெரம்பலூர் எம்.எல்.ஏவுமான ஆர். தமிழ்ச்செல்வன், தலைமை கழக பேச்சாளர் கே.சி சந்திரன், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அ.அருணாசலம், மாநில மீனவரணி இணைச்செயலாளர் பி.தேவராஜன், முன்னாள் எம்.பிக்கள் மா.சந்திரகாசி, ஆர்.பி மருதைராஜா மாவட்ட பொருளாளர் பூவை.தா.செழியன் உள்ளிட்ட பல்வேறு அணி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட அவைத் தலைவர் நெய்க்குப்பை ஆர்.துரை ஒன்றிய செயலாளர்கள் என்.கே. கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), வேப்பூர் கிருஷ்ணசாமி, செந்துறை சுரேஷ் மற்றும் பேரூர், கிளைக் கழக பொறுப்பாளர்கள், பெரும் திரளாக கலந்து கொள்ள உள்ளனர். என்.டி சந்திரமோகன் வரவேற்பு நிகழ்த்தவும் உள்ளளர். அதுசமயம், பெரம்பலூர் நகர வார்டு செயலாளர்கள், கிளைக் கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.07.2026 - 07:17:28
Privacy-Data & cookie usage: