பெரம்பலூரில் நாளை மறுநாள், மைக்ரோ லெவல் தேசிய மக்கள் நீதிமன்றம்!

schedule
2021-07-09 | 16:54h
update
2021-07-09 | 16:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Micro Level National People’s Court (LOK Adalat) in Perambalur tomorrow!

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் பேரிலும்? பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நாளை மறுநாள் 10ம் தேதி மைக்ரோ லெவல் தேசிய மக்கள் நீதிமன்றம், பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் நடக்கிறது. அதில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் சமரச முறையில் தீர்வு காணப்படவும், வழக்காடிகள், வழக்குகளை, வழக்கமான நீதிமன்ற நடைமுறைகள் இன்றி விரைந்து முடிக்கலாம். தேசிய மக்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்ய முடியாது. இந்த உத்தரவு இறுதியானது. கடுமையான நடைமுறைகள் இன்றி ஏழை, எளிய மக்களுக்கு விரைவாக நீதி வழங்கும் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவும், நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான எஸ். சுபாதேவி தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 15:57:08
Privacy-Data & cookie usage: