சாத்தூர் அருகே சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

schedule
2018-05-20 | 14:45h
update
2026-06-13 | 02:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Minister K.D Rajendra balaji who helped the people in the road accident near Sattur


விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 25). இவரும் இவரது உறவினர் வேல்ராஜ் (21) என்பவரும் நள்ளி அருகே சிங்கமுடையார் கோயிலுக்கு சென்று விட்டு சாத்தூர் – கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

Advertisement

வள்ளிமில் அருகே நான்கு வழிச்சாலையில் எதிர் திசையில் சென்று கொண்டிருந்த போது அம்பையிலிருந்து கோவை நோக்கி வந்த காரும் இருசக்கரவாகனமும் மோதிக் கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது கோவில்பட்டியில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டு அந்த வழியாக வந்த பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி உடனடியாக காரை நிறுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டார். அமைச்சருடன் பாதுகாப்பு போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து சாத்தூர் போலீஸ் மற்றும் ஆம்புலனஸ் வாகனங்களுக்கு அமைச்சர் தகவல் தெரிவித்தார். காயம் அடைந்த வேல்ராஜ்க்கு ஆறுதல் கூறி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து சாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 02:58:59
Privacy-Data & cookie usage: