மத்திய, மாநில அரசின் நிதியில், ரூ. 2.56 கோடி மதிப்பில் 6 கிராமங்களுக்கு குடிநீர் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சிவசங்கர்!

schedule
2022-07-13 | 14:04h
update
2022-07-13 | 14:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In central and state government funds, Minister Sivashankar laid the foundation stone for drinking water works for 6 villages at a cost of Rs. 2.56 crores!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல உசேன் நகரம், கோட்டைமேடு, கொட்டரை, ஆதனூர், மதுராகுடிகாடு, கூத்துார் ஆகிய கிராமங்களுக்கு, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒதியம், கரம்பியம், பெரியம்மாபாளையம், மூங்கில்பாடி மற்றும் லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் 16,000 நபர்களுக்கான குடிநீர் தேவைக்கா மறுசீரமைப்பு செய்திடும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியுடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ. 2.56 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சரும், குன்னம் தொகுதி எம்.எல்ஏவுமான சிவசங்கர் இன்று அடிக்கல் நாட்டினார். ஆலத்துார் யூனியன் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

Advertisement

இத்திட்டத்திற்கு வேப்பூர் ஒன்றியத்தில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு ஆழ்துளைக் கிணறுகளுடன், புதிதாக 150 மி.மீ விட்டமுள்ள புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படவுள்ளது, அதேபோல ஆலத்துார் ஒன்றியத்தில் உள்ள இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த குடிநீர் திட்டப்பணிகள் 6 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சீராக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும், என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 03:43:09
Privacy-Data & cookie usage: