அமைச்சர் சிவசங்கர் குன்னம் தொகுதியில், ரூ.4.38 கோடியில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைத்தார்.

schedule
2023-12-29 | 16:16h
update
2023-12-29 | 16:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Minister Sivashankar laid the foundation stone for various new projects worth Rs.4.38 crore in Kunnam constituency and started the unfinished works.

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.38 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைத்தார்.

அவரது, சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு இடங்களில் ரூ.51.01 லட்சம் மதிப்பிலான 12 வளர்ச்சித் திட்டப் பணிகளும், ஜல் ஜீவன் மிசன் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் ரூ.1.23 கோடி மதிப்பிலான 05 வளர்ச்சித் திட்டப் பணிகளும், பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் ரூ.1.25 கோடி மதிப்பிலான 20 வளர்ச்சித் திட்டப் பணிகளும் என பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் ரூ.4.02 கோடி மதிப்பிலான 40 வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

Advertisement

கிழுமத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், ரூ.1.20 கோடி மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பணிகளும் இன்று தொடங்கி வைத்தார்,

இதேபோல சிறுமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பொன்னகரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.15.27 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தினையும், முருக்கன்குடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.17.43 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தினையும், திருமாந்துறையில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் என மொத்தம் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதில், வேப்பூர் ஊராட்சி யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராடசிக்குழு உறுப்பினர் கருணாநிதி, முன்னாள் சேர்மன் அழகு.நீலமேகம், திமுக பிரமுகர் பட்டுச்செல்வி ராஜேந்திரன் உள்பட பல்வேறு அரசு துறை அலுவலர்கள், திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 20:29:06
Privacy-Data & cookie usage: