பெரம்பலூரில் மைனர் பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை

schedule
2017-01-19 | 15:44h
update
2026-06-27 | 04:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Minor girl raped a 10-year rigorous imprisonment in a in Perambalur the young men


பெரம்பலூரில் வீடு புகுந்து மைனர் பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு கூறியது

பெரம்பலூர் அருகே உள்ள வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்த சோலைத்து மகன் சரத்குமார் (வயது 23). இவர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பெரியவடகரை கிராமத்தில் உறவினர் வீட்டுக்கு கடந்த 2015 ஆண்டு சென்ற போது பக்கத்து வீட்டில் அத்து மீறி புகுந்து அந்த வீட்டில் இருந்த மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கற்பழிப்பழித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில், மைனர் பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக சரத்குமாருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும், விதித்தார். மேலும், அபராதம் கட்டத் தவறினால் ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அத்து மீறி வீடுபுகுந்ததற்காக ஓர் ஆண்டு சிறைதண்டனையையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும், 3 மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்கவும், இந்த தண்டனைகள் அனைத்தையும் ஏக காலத்தில் குற்றவாளி அனுபவிக்க வேண்டும் உத்திரவிட்டு மகிளா நீதி மன்ற நீதிபதி விஜயகாந்த் உத்திரவிட்டார்.

நீதிபதி உத்திரவின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் குற்றவாளி சரத்குமாரை திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 04:10:35
Privacy-Data & cookie usage: