மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த பட்டதாரிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை ; பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு

schedule
2017-05-31 | 11:42h
update
2026-04-29 | 10:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் அருகே மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த பட்டதாரி இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 5ஆயிரம் அபராதமும் விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 23). ஆசிரியர் பயிற்சி முடிந்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 2015 ஆண்டு அதே ஊரை சேர்ந்த மைனர் பெண்ணை ஒருவரை காதலிப்பதாகவும், அவரை விடாமல் தொல்லை கொடுத்து வந்ததுடன் ஆசைவார்த்தைகளை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.

Advertisement

இதே போன்று 2015 அக்டோபர் மாதம் 26 தேதி அந்த மைனர் பெண்ணை மிரட்டி விருத்தாசலத்திற்கு (கடலூர்) கடத்தியும் சென்றதாகவும், பின்னர், அடுத்த நாள் விடுவித்தும் உள்ளார்.

இது குறித்து மைனர் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

இன்று வழக்கை விசாரித்த மகிளர் கோர்ட் நீதிபதி விஜயகாந்த் , குழந்தைகள் பாதுகாத்தல் சட்டம் 2012 பிரிவு 5 எல் உட்பிரிவு 6ன் கீழ் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும், அபாராதத் தொகையை கட்டத் தவறினால், 3 ஆண்டுகள் கூடுதல் சிறைத்தண்டனையையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், குற்றவாளி, சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலத்தில் இருந்து கழித்து கொள்ளவும், வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்பிற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்.

இழப்பீட்டுத் தொகையை பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு காலதாமதமின்றி விரைவாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி பட்டதாரி வாலிபர் குமரேசன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2026 - 10:29:45
Privacy-Data & cookie usage: