சிறுபான்மை இன மாணவர்கள் இந்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் : பெரம்பலூர் கலெக்டர்!

schedule
2022-01-06 | 00:20h
update
2026-06-14 | 13:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Minority students can apply for Government of India Scholarship: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பதினொன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்பகல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர்களிடமிருந்து 2021-2022ஆம் ஆண்டிற்கு மத்திய அரசின் பள்ளிபடிப்பு, பள்ளிமேற்படிப்பு மற்றும் தகுதி வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க 15.01.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தகுதிவாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் அனைத்து கல்வி நிலையங்களும் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை கோரி மாணவ, மாணவியர்களிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபார்க்க வேண்டும் எனவும், தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ, மாணவியரின் விண்ணப்பத்தினை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்டும், தவறும் கல்வி நிலையங்களின் மீது அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

சரிபார்க்க கடைசி தேதி: பள்ளிபடிப்பு உதவித்தொகை 15.01.2022, பள்ளிமேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை : 31.01.2022 இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 13:25:08
Privacy-Data & cookie usage: